இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 171 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ரோஹித் ஷர்மாவை விட ஒருபடி வேகமாகவே விளையாடிய லோகேஷ் ராகுல், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட்சைட் எட்ஜ் ஆகி வெளியேறினார். ஆனால், மைதானத்தை விட்டு வெளியேறும் வரை, அவர் தான் அவுட்டானதை ஒப்புக் கொள்ளவேயில்லை. 

Advertisement

அதாவது, ஆண்டர்சன் ஓவரில் அவர் பந்தை எதிர்கொள்ள தயாரான போது, அவரது பேட் அவரது பேடின் பின்பகுதியை உரசி முன்னாள் வந்தது. இதனால், பந்து பேட்டில் பட்டது போன்ற ஒலி எழுந்தது. இங்கிலாந்து வீரர்களும் ஸ்ட்ராங்காக அவுட் அப்பீல் செய்தனர். தொடர்ந்து ரிவ்யூ கேட்கப்பட, அப்போது தான் பந்து பேட்டிங் பின்புறம் மிக மிக லேசாக உரசிச் சென்றிருப்பது தெரிந்தது.

ஆனால், ராகுல் தனது பேட் பேடில் உரசியதால் தான் சப்தம் கேட்டது என்பதில் உறுதியாக இருந்தார். அது உண்மையும் கூட. ஆனால், அவர் அந்த மனநிலையில் இருந்ததால், பேட்டில் லேசாக பந்து உரசியதை அவர் கவனிக்கவில்லை. இதனால், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தும், ராகுல் கள நடுவரிடம், 'தான் அவுட் இல்லை.. பேட் பேடில் தான் பட்டது' என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டுத் தான் சென்றார். அதன்பிறகு அவர் டிரெஸ்ஸிங் ரூம் சென்று மானிட்டரில் பார்த்த பிறகு, தான் அவுட் என்பதையே நம்பினார்.

இதையடுத்து ஐசிசி நடத்தை விதிகளை மீறும் வகையில் களத்தில் நடந்து கொண்டதிற்காக கே.எல்.ராகுலிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 15 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்மீதான குற்றத்தையும் ராகுல் ஒப்புக்கொண்டுள்ளதால், அவர் மேற்கொண்ட விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News