ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர்?

Updated: Sat, Jul 15 2023 20:13 IST
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் (Image Source: Google)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தொடங்குகிறது. இந்தாண்டு, ஒருநாள் உலகக்கோப்பை 5தொடர் நடைபெறுவதால் இம்முறை ஆசிய கோப்பைத் தொடர் ஒருநாள் போட்டிகளாக நடத்தப்படுகிறது. மேலும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணியை தயார் செய்வதற்கு இந்த தொடர் மிகப் பெரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்திய அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார் என்பதை தீர்மானிக்க இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த இரண்டு முக்கிய வீரர்கள் தற்போது உடல் தகுதியை பெற்றிருக்கிறார்கள். அதன்படி கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டுள்ள இவ்விருவரும் தீவிர உடல் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர் . ஆசியக் கோப்பை க்கு இன்னும் 45 நாட்களுக்கு மேல் இருப்பதால் இவ்விருவரும் அணிக்கு திரும்புவதில் எந்த சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் நடுவரிசைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இவ்விருவரும் அணிக்கு திரும்பும் பட்சத்தில் பேட்டிங் வரிசை மேலும் பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் சூரியகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு பிளேயிங் லெவன் வாய்ப்பு கிடைப்பது கடினமாகும். 

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுலும் திறமை வாய்ந்த வீரர்கள் என்பது சந்தேகமே இல்லை என்றாலும் மேட்ச் ப்ராக்டிஸ் மற்றும் அவருடைய பார்ம் எப்படி இருக்கிறது என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது . எனினும் ஆசியக் கோப்பை ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் இங்கிலாந்து ஒரு நாள் தொடர் என தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் அதற்குள் இந்திய அணி வீரர்களுக்கு மேட்ச் பிராக்டிஸ் கிடைத்துவிடும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை