ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த கேஎல் ராகுல்!

Updated: Sun, Dec 18 2022 22:19 IST
KL Rahul is the fifth Indian captain to achieve this feat! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் ஆனது நூறு வருட பாரம்பரியத்தை நெருங்கிக் கொண்டிருந்தாலும் வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி பெறுவது என்பது அவ்வப்போது அரிதாக நடக்கும் ஒன்றுதான் . இந்திய அணிக்காக பல வெற்றி கேப்டன்கள் இருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் வெற்றியை தேடி தந்தவர்கள் சிலரே .

இந்திய அணிக்கு வெளிநாடுகளில் வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் என்றால் அது கங்குலி தான். கங்குலி அமைத்துக் கொடுத்ததை வைத்து அதை கட்டமைத்தவர் எம் எஸ் தோனிஆவார்.தோனி கட்டமைத்ததை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் விராட் கோலி . விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி 2000 களில் இருந்து ஆஸ்திரேலியாவை போலவே உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது என்றால் மிகையாகாது.

இந்திய கிரிக்கெட் அணியை பல சிறந்த வீரர்கள் வழி நடத்தி இருந்தாலும் ஒரு சில கேப்டன்கள் தான் கிரிக்கெட்டின் மூன்று வடிவ போட்டிகளிலும் வெளிநாடுகளில் வெற்றி பெற்றுள்ளனர் . அவர்கள் விரேந்தர் சேவாக் எம் எஸ் தோனி விராட் கோலி அஜிங்கிய ரஹானே மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அவர் . இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணியின் முதல் டி20 போட்டியில் கேப்டனாக இருந்த சேவாக் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் . அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேவாக் தலைமையில் வங்கதேச அணியை வீழ்த்தியது. 2012 ஆம் ஆண்டு முத்தரப்பு ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்த சேவாக் ஆஸ்திரேலியாவில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றார் .

அஜிங்கிய ரஹானே தலைமையிலான இந்திய அணி 2020 மற்றும் 21 ஆம் வருடம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. விராட் கோலி மற்றும் எம் எஸ் தோனி ஆகியோர் பல ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றிக்கு வழி நடத்திச் சென்றுள்ளனர் . இந்த பட்டியலில் தற்போது புதியதாக இணைந்திருப்பவர் கே எல் ராகுல் . 

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் கேப்டனாக இருந்து வெற்றி பெற்றார் . இந்த வருடத்தில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது . 

தற்போது நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் வெளிநாடுகளில் டி20 ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் கே எல் ராகுல் . இந்திய அணியின் முழு நேர கேப்டனான ரோஹித் சர்மா இதேபோன்று மூன்று வழியை போட்டிகளிலும் வெளிநாடுகளில் ஜெயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை