இந்த போட்டியில் என்னால் அதனை செய்ய முடியவில்லை - கேஎல் ராகுல்!

Updated: Sun, Aug 21 2022 12:41 IST
Image Source: Google

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி ஜிம்பாப்வேவை 161 ரன்களுக்குக்கு சுருட்டியது.

இதை அடுத்து களமிறங்கி இந்திய அணி எளிதாக வென்றாலும் அடுத்தடுத்த ஐந்து விக்கெட் இழந்து சற்று தடுமாறி, முடிவில் 25.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் கே எல் ராகுல் தொடக்கவீரராக களமிறங்கியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் இளம் வீரர்களின் வாய்ப்பை பிடுங்கிக் கொண்டு சுயநலமாக முடிவு எடுத்து உள்ளதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடக்க வீரராக களம் இறங்கியும் ராகுல் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து ரசிகர்களை மேலும் வெறுப்படைய செய்துள்ளார்.

இந்த நிலையில் தாம் தொடக்க வீரராக களம் இறங்கியதற்கான காரணத்தை ராகுல் குறிப்பிட்டுள்ளார். வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“ 162 ரன்கள் செஸ் செய்யும் போது தங்களுக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை. காரணம் எங்கள் அணியில் எட்டாவது வீரர் வரை பேட்டிங் செய்வார்கள்.இந்த போட்டியில் சில வீரர்கள் களத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது உள்ளபடியே மகிழ்ச்சி.

எனக்கும் களத்தில் பேட்டிங் செய்ய நேரம் தேவைப்பட்டது. இந்த தொடரில் விளையாடி சில ரன்களை குவித்து என்னுடைய உத்வேகத்தை அதிகப்படுத்திக் கொள்ள தொடக்க வீரராக களம் இறங்கினேன். ஆனால் துரதிஷ்டவசமாக அது பலன் அளிக்கவில்லை. ஜிம்பாப்வே அணியில் சிறப்பாக பந்து வீசக்கூடிய வீரர்கள் உள்ளனர். நான் அவர்கள் வங்கதேசத்துடன் விளையாடும் போது அவர்களது பந்துவீச்சை கண்டு களித்தேன்.

எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் வெற்றியை தேடி கொடுத்துள்ளனர். எங்களுக்கு இந்தப் போட்டி கொஞ்சம் சவாலாக தான் இருந்தது. நாங்கள் இங்கு நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற வந்தோம். எல்லாம் வாய்ப்புகளும் மிகவும் முக்கியம்தான்.அடுத்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம். நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்கு மிகவும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய ஜிம்பாப்வே கேப்டன் ரெஜிஸ் சகாப்வா, “இந்த ஆட்டத்தில் நாங்கள் நல்ல முறையில் போராடினோம். கடந்த சில ஆட்டங்களாக எங்களால் விக்கெட்டுகளை ஆரம்பத்தில் வீழ்த்த முடியவில்லை.ஆனால் இன்று அதை செய்தோம். இந்த ஆட்டத்தில் நாங்கள் குறைவான இலக்கை நிர்ணயித்து விட்டோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த சவாலுக்கு நாங்கள் தயாராகி விட்டோம்” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை