ஜிம்பாப்வே தொடரை தவறவிட்டது குறித்து கேஎல் ராகுல் விளக்கம்!

Updated: Sun, Jul 31 2022 12:35 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணியானது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த ஒருநாள் தொடரில் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஐபிஎல் தொடருக்கு அடுத்து காயம் காரணமாக பல தொடர்களை தவறவிட்ட கே.எல் ராகுல் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்த ஜிம்பாப்வே தொடரிலும் இடம்பெறாதது சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அணிக்காக விளையாடிய கேஎல் ராகுல் 5 மாதங்களுக்கும் மேலாக தற்போது இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது கே.எல் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவான ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். 

அதன்படி அவர் குறிப்பிடுகையில், “நான் ரசிகர்களுக்கு இரண்டு முக்கிய விஷயங்களை பத்தி தெளிவுபடுத்தியாக வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் என்னுடைய உடல்நிலை மற்றும் பிட்னஸ் ஆகியவற்றை பற்றி சில கருத்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

எனக்கு கடந்த ஜூன் மாதம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. அதன் பின்னர் நான் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்பி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்தேன். ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக கிளம்பும் முன் எனக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதால் மீண்டும் இரண்டு வாரங்கள் நான் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 

அதனை தொடர்ந்து தற்போது நான் மீண்டும் அதிலிருந்து குணமடைந்து வந்ததால் விரைவில் இந்திய அணிக்கு திரும்பவேன் என்று நினைத்தேன். இருந்தாலும் தற்போதைய சூழலில் ஜிம்பாப்வே தொடரை தவறவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் என்னுடைய உடற்பகுதியை மேம்படுத்திக் கொண்டு வெகுவிரைவில் இந்திய அணிக்காக விளையாட திரும்புகிறேன்” என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை