இது போன்ற தோல்விகளை ஜீரணிக்க கடினமாக உள்ளது - கேஎல் ராகுல்!

Updated: Sun, Apr 14 2024 20:20 IST
இது போன்ற தோல்விகளை ஜீரணிக்க கடினமாக உள்ளது - கேஎல் ராகுல்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ர்ன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 39 ரன்களையும் சேர்த்தனர். கொல்கத்தா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.  இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.  மேலும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பில் சால்ட் ஆட்ட்நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “நாங்கள் மிக மோசமாக தோல்வியடையும் நாள்களில் இதுவும் ஒன்று. இது போன்ற தோல்விகளை ஜீரணிக்க கடினமாக உள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு அணியும் இதுபோன்ற தோல்வியைச் சந்தித்து வருகிறது. இந்த தோல்வியால் தளர்ந்துவிடாமல், தவறுகளைச் சரிசெய்து சிறப்பாக கம்பேக் கொடுப்போம் என நம்புகிறேன். 

இப்போட்டியின் நாங்கள் பேட்டிங் செய்த போது சரியான ஷாட்டுகளை விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு கொஞ்சம் ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும். அங்கு தான் நாங்கள் தவறு செய்தோம். மேலும் இரண்டாவது இன்னிங்ஸின் பந்தை அடிப்பதற்கு எளிதாக இருந்தது என நினைக்கிறேன். இப்போட்டியில் விளையாடிய அறிமுக வீரரான ஷமார் ஜோசப் அதி வேகமாக பந்துவீசுகிறார். 

மேலும் அவர் தனது முதல் போட்டியில் விளையாட உற்சகத்துடன் இருந்தார். அதனால் அவர் கூடுதல் வேகத்திலும் பந்துவீசினார். ஆனால் அவற்றில் சில பந்துகளை தவறான லைனில் வீசினார். ஆனால் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தை விளையாடும் விரருக்கு இது சில சமயங்களில் நடக்கும். ஏனவே அவர் தனது லைன் மற்றும் லெந்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அவர் பவர்பிளேவில் பந்தை ஸ்விங் செய்தது அருமையாக இருந்தது. 

அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்தன் மூலம் நாங்கள் பீதி அடையாமல், எங்கு தவறு செய்தோம் மற்றும் ஏன் எங்களால் இந்த போட்டிகளில் 160 ரன்களைத் தாண்டமுடியவில்லை என்பதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். அந்த காரணங்களை கண்டுபிடித்து மீண்டும் நாங்கள் சிறப்பாக திரும்பி வருவோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை