ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவது சந்தேகம்?

Updated: Tue, Apr 02 2024 12:48 IST
Image Source: Google

இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்தவகையில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கேஎல் ராகுல் தலைமையில் முதல் போட்டியில் தோல்வியடைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, அடுத்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையில் முதல் வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. 

இதனால் இன்றைய போட்டியிலும் லக்னோ அணி வெற்றிபெற்று தங்களது வெற்றிக் கணக்கை தொடரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கேப்டன் கேஎல் ராகுல் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இத்தொடருக்கு முன்னதாக காயத்தை சந்தித்த அவர் லண்டன் சென்று சிகிச்சை பெற்றுவந்தார். 

அதன்பின் தேசிய கிரிக்கெட் அகாடமில் சிகிச்சை பெற்றுவந்த அவர் தனது உடற்தகுதியை நிரூபித்து ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். பின்னர் முதல் போட்டியில் பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், இரண்டாவது போட்டியில் பேட்டராக மட்டுமே களமிறங்கியதுடன் இம்பேக்ட் பிளேயராகவும் விளையாடினார். இதனால் அவருக்கு அப்போதே காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. 

இந்நிலையில் இன்று பெங்களூரு அணிக்கு எதிராக கேஎல் ராகுல் தனது சொந்த ஊரில் விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்றைய போட்டியில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக இன்றைய போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும் நிக்கோலஸ் பூரன் வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், தீபக் ஹூடா, கிருஷ்ணப்பா கௌதம், க்ருனால் பாண்டியா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், பிரேராக் மன்காட், யுத்வீர் சிங் சரக், டேவிட் வில்லி, அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், ஷமார் ஜோசப், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, நவீன் உல் ஹக், ஷிவம் மாவி, மணிமாறன் சித்தார்த்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை