இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி செட்டர்வைட், மார்டினின் அரைசதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 244 ரன்களைச் சேர்த்தது. இதில் மார்டின் 65 ரன்களையும், செட்டர்வைட் 54 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு வின்ஃபீல்ட் ஹில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து 33 ரன்களைச் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.