அவர் இந்திய அணிக்காக விளையாட இன்னும் சிறுது தூரமே இருக்கிறது - தினேஷ் கார்த்திக்!

Updated: Mon, Jan 31 2022 15:20 IST
Image Source: Google

இந்திய அணியின் அனுபவ வீரரும், தமிழ்நாடு அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த அவர் அதன் பிறகு பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார். 

நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரை மூன்றாவது முறையாக வென்ற தமிழக அணியில் அவர் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவது குறித்து தினேஷ் கார்த்திக் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அணியில் உள்ள வீரர்களின் வளர்ச்சி மிக பிரமாதமாக உள்ளது. நிச்சயம் அவர்கள் அனைவருமே இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நிறைய தமிழக வீரர்கள் இடம் பிடித்தனர்.

அதேபோன்று அவர்கள் இந்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பார்கள். மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் இந்திய அணியிலும் அவர்கள் இடம் பிடிக்க வேண்டும். கடந்த ஆண்டு 14 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியனர். இம்முறை அதையும் தாண்டி பல வீரர்கள் விளையாட தயாராக இருக்கின்றனர்.

இதில் குறிப்பாக ஷாருக் கான் இந்திய அணியில் விளையாடும் தூரத்தை நெருங்கிவிட்டார். ஏனெனில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்திய அணியின் கதவுகளை தட்டி கொண்டே இருக்கிறார். இன்னும் அவர் இந்திய அணியில் விளையாட சிறிது தூரம் மட்டுமே எஞ்சியுள்ளது. விரைவில் அவர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பினை பெற்று இந்திய அணியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் கூறியது போன்று தற்போது ஷாருக் கான் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை கிட்டத்தட்ட நெருங்கி விட்டார் என்றே கூறலாம். ஏனெனில் எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் வீரர்கள் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் அப்போது அணியில் இணையும் ஸ்டான்ட் பை வீரராக சாய் கிஷோர் மற்றும் ஷாரூக் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை