20223 ஆண்டின் சிறந்த வீரர் விருது: பரிந்துரையை வெளியிட்டது ஐசிசி!

Updated: Fri, Jan 05 2024 19:52 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தலா 2 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி இந்திய அணியை சேர்ந்த விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் 2023ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கு வழங்கப்பட்டும் ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் கோப்பை விருதுக்கும் 4 பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் இலங்கையை சேர்ந்த சமாரி அத்தபட்டு, இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கிவர் பிரண்ட் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::