டி20 உலகக்கோப்பையில் கோலியை கோலியை உட்காரவைக்க பிசிசிஐ முடிவு? 

Updated: Sat, Jul 09 2022 16:00 IST
Kohli Might Be Forced To Bench From The T20 World Cup XI (Image Source: Google)

டி20 உலககோப்பை தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் முதல் நடைபெற உள்ளது.  இதற்காக அனைத்து நாடுகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணி பல்வேறு வீரர்களை டி20 உலககோப்பைக்காக தயார்படுத்தி வருகிறது.  

ஐபிஎல் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு, சில தொடர்களிலும் விளையாடி வருகின்றனர்.  இந்நிலையில் ஃபார்ம் அவுட்டால் தவித்து வரும் விராட் கோலியை உலக கோப்பை அணியில் இருந்து கழட்டி விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட்கோலி கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி முடிந்தவுடன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.  டெஸ்ட் போட்டியில் கோலியின் கேப்டன் பதவியை தானாக பிசிசிஐ நீக்கி அனைத்து வித போட்டிக்கும் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்தது. டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து தொடர்ந்து 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று புதிய சாதனையையும் படைத்து உள்ளார் ரோஹித் சர்மா.  

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், "கிட்டத்தட்ட 450 டெஸ்ட் விக்கெட்டுகளைக் எடுத்த பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் அணியின் ப்ளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டால், தொடர்ந்து மோசமாக ஆடி வரும் விராட் கோலியும் டி20 போட்டிகளில் நீக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

"கோஹ்லி இப்போது ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக பெரிய ரன்கள் எதுவும் அடிக்கவில்லை.  தற்போது பிசிசிஐ டி20 அணியில் இருந்து கோலியை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக விராட் பேட்டிங் செய்வதை பார்த்து வருகிறோம், ஆனால் தற்போது அவரது பேட்டிங்கில் பெரிய பிரச்னை உள்ளது.  

திறமையான இளைஞர்களை அணியில் இருந்து ஒதுக்கி வைக்க முடியாது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பெயரை பிசிசிஐ சேர்க்கவில்லை. இதனை ஓய்வு எனவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது கழட்டி விட பட்டார் எனவும் எடுத்துக்கொள்ளலாம்" என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

இன்று எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டிக்கு முன்னதாக கோலி இந்திய அணியில் இணைந்துள்ளார். இந்திய அணி முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.   இரண்டாவது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை