ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, May 02 2022 13:24 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு சீசனில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி ஒன்பது போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, தற்போது புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் இன்றைய போட்டியில் தோல்வியுற்றால் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும். இதனால்,ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,இந்த சூழ்நிலையைத் தவிர்க்க தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி செல்ல முயற்சி செய்யும்.

ஆனால்,மறுபுறம்,ராஜஸ்தான் ராயல்ஸ் ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் ஏற்கனவே ஒருமுறை ப்ரபோர்ன் மைதானத்தில் மோதிய நிலையில், அப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால்,ராஜஸ்தான் அணிக்கு இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா பதிலடி கொடுக்குமா என்று பொறுத்திருந்து காண்போம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 25
  • கொல்கத்தா வெற்றி - 13
  • ராஜஸ்தான் வெற்றி - 12

உத்தேச லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஆரோன் பின்ச்,வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கே),நிதிஷ் ராணா,பாபா இந்திரஜித் , ரின்கு சிங்,ஆண்ட்ரே ரஸ்ஸல்,சுனில் நரைன்,உமேஷ் யாதவ்,டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர்,தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கே),டேரில் மிட்செல்,ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக்,ரவிச்சந்திரன் அஷ்வின்,டிரெண்ட் 
போல்ட்,பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.

ஃபேண்டஸி லெவன்

  • கீப்பர் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், ரவிச்சந்திரன் அஷ்வின், சுனில் நரைன்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, டிம் சவுத்தி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை