ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, May 14 2022 13:39 IST
Image Source: Google

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனின் 61ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - எம்சிஏ மைதானம், புனே
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

அதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் தொடரை விட்டு வெளியேறும் என்பதால் இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடும்.

அதேபோல் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் 7ஆவது இடத்தில் உள்ளது. 

ஹைதராபாத் அணியும் இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இன்றையப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சாமிருக்காது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 22
  • கொல்கத்தா வெற்றி - 14
  • ஹைதராபாத் வெற்றி - 8

உத்தேச அணி 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஜிங்கியா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கே), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷெல்டன் ஜாக்சன் / சாம் பில்லிங்ஸ், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக்.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன்
  •      பேட்டர்ஸ் - ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், ஐடன் மார்க்ரம்
  •      பந்துவீச்சாளர்கள் - உம்ரான் மாலிக், டி.நடராஜன், டி.சௌத்தி, ஜே.சுசித்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை