BAN vs IND: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு!

Updated: Fri, Dec 09 2022 16:04 IST
Image Source: Google

வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் , காயம் காரணமாக ரோஹித் சர்மா, தீபக் சாஹர் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரை ஏற்கனவே இந்திய அணி இழந்த நிலையில், ஓயிட்வாஷை தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தவறான அணி தேர்வால் மட்டுமே இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அக்சர் பட்டேல் முழு உடல் தகுதி எட்டாத நிலையில் அணியில் தேர்வு செய்யப்பட்டதால், முதல் ஒருநாள் போட்டியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக ஒருநாள் தொடர் தொடங்கும் முன்பு ரிஷப் பண்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் ராகுல் விக்கெட் கீப்பர் ஆனார். இதே போன்று குல்தீப் சென் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி உள்ளார்.

இதனால் முழு உடல் தகுதி இல்லாமல் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதாக ரோஹித் சர்மா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் வங்கதேசம் போன்ற சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் விளையாட, ஒரு பிரத்யேக சுழற்பந்துவீச்சாளர் கூட இந்திய அணியில் இல்லை . இதனால் இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற தவறான யூத்தியில் களமிறங்கியது.

இதன் காரணமாக கூட இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கலாம். தற்போது தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதில் களமிறங்க வேறு வேகப்பந்துவீச்சாளர் அணியில் இல்லை. இதன் காரணமாக ஷாபாஸ் அகமது தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது தோல்வியின் மூலம் பாடம் கற்று கொண்டுள்ள பிசிசிஐ, பிரத்யேக சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவை அணியில் சேர்த்துள்ளது. அவர் ஏற்கனவே வங்கதேசத்தில் இந்திய டெஸ்ட் அணியுடன் உள்ளதால், நாளைய ஆட்டத்தில் அவர் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இல்லை. குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சாவது , வங்கதேச பேட்டிங்கை கட்டுப்படுத்துமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை