ஒருநாள் உலகக்கோப்பை தொடரை இந்த அணிகள் தான் வெல்லும் - குமார் சங்ககாரா!

Updated: Thu, Jan 05 2023 10:52 IST
Image Source: Google

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அது இரண்டு விதமாக பிரிந்து கிடக்கிறது. ஆசியக் கால நிலை, சேனா (SENA) காலநிலை இப்படி இரண்டு விதங்கள்தான் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.ஆசியக் காலநிலையில் விளையாடும்போது ஸ்பின்னர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். சேனாஅ என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஆகையால், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை உலகக் கோப்பை எந்த நாடுகளில் நடக்கிறது என்பது மிகவும் முக்கியம். ஆசியக் காலநிலையில் பெரும்பாலும், ஆசிய அணிகள்தான் வெல்லும்.

இதனால்தான், அக்டோபர் இறுதியில் இந்தியாவில் துவங்கி நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா பதிலளித்துள்ளார். அதில், “ஆசிய மண்ணில், ஆசிய அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்பது 2011ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது. சமீப காலமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் ஆசியக் காலயிலையில் ஸ்பின்னர்களை எப்படி பயன்படுத்துவது என்பதை நன்று கொண்டுவிட்டனர். இதனால், ஆசியக் காலநிலை, ஆசிய அணிகளுக்குதான் சாதகம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆசியாவில் சேனா நாடுகளை சேர்ந்த ஸ்பின்னர்களும் சிறப்பாக செயல்பட முக்கிய காரணம் ஐபிஎல்தான். ஐபிஎலில் வெளிநாட்டு நட்சத்திர ஸ்பின்னர்கள் நீண்ட காலம் விளையாடுவதால், அவர்கள் ஆசிய காலநிலையை பழக்கப்படுத்திவிட்டனர். இதனால்தான், சமீப காலமாக ஆசிய மண்ணில் இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகள் வெற்றிநடை போடுகிறது. ஆகையால், ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில் ஆசிய அணிகளில் ஒன்றுதான் கோப்பை வெல்லும் என நினைக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

சங்ககாரா கூறியப் போலவே ஆசிய மண்ணில் சமீப காலமாக இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய ஆகிய அணிகள் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. ஒருநாள் தொடரையும்தான். 

அதேபோல், ஆஸ்திரேலிய அணி இலங்கையில் டி20 தொடரைக் கைப்பற்றியது. நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அபாரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில் ஆசிய அணிகளுக்கு மட்டுமல்ல, சேனா நாடுகளுக்கும் கோப்பை வெல்ல வாய்ப்பு அதிகம் என்பது சங்ககாரா பேட்டி மூலம் தெரிய வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை