பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Fri, Feb 23 2024 22:56 IST
Image Source: Cricketnmore

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்த்து ஷான் மசூத் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. நடப்பு பிஎஸ்எல் தொடரில் லாகூர் கலந்த்ர்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியளில் 5ஆம் இடத்தில் உள்ளது. அதேசமயம் கராச்சி கிங்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியளின் 4ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்று இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்ய லாகூர் கலந்தர்ஸ் அணி போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - லாகூர் கலந்தர்ஸ் vs கராச்சி கிங்ஸ் 
  • இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் கடாஃபி கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. மேலும் இந்த மைதானத்தின் பேட்டிங் சராசரி 162 ரன்களாக உள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டி அதிக ரன்கள் கொண்ட போட்டியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 17
  • கராச்சி கிங்ஸ் - 11
  • லாகூர் கலந்தர்ஸ் - 06

உத்தேச லெவன்

லாகூர் கலந்தர்ஸ்: ஃபகர் ஸமான், சாஹிப்சாதா ஃபர்ஹான், ரஸ்ஸி வான் டெர் டுசென், அப்துல்லா ஷஃபிக், சிக்கந்தர் ராசா, டேவிட் வைஸ், கார்லோஸ் பிராத்வைட், ஜஹந்தத் கான், ஷஹீன் அஃப்ரிடி (கே), ஹாரிஸ் ரவுஃப், ஸமான் கான்

கராச்சி கிங்ஸ்: ஷான் மசூத் (கே), முகமது அக்லக், ஜேம்ஸ் வின்ஸ், ஷோயப் மாலிக், கீரன் பொல்லார்ட், முகமது நவாஸ், இர்ஃபான் கான், டேனியல் சாம்ஸ், ஹசன் அலி, தப்ரைஸ் ஷம்சி, மிர் ஹம்சா

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: சாஹிப்சாதா ஃபர்ஹான்
  • பேட்டர்ஸ்: கீரென் பொல்லார்ட், ஃபகர் ஸமான், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஜேம்ஸ் வின்ஸ்
  • ஆல்ரவுண்டர்கள்: சோயிப் மாலிக் (துணை கேப்டன்), சிக்கந்தர் ரஸா(கேப்டன்), டேனியல் சாம்ஸ்
  • பந்துவீச்சாளர்கள்: மிர் ஹம்சா, ஷஹீன் அஃப்ரிடி, ஸமான் கான்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை