பிஎஸ்எல் 2021: லாகூர் கலந்தர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Jun 08 2021 20:23 IST
Image Source: Google

பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஆறாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பின்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நாளை (ஜூன் 9) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெற உள்ள 15 வது போட்டியில் சொஹைல் அக்தர் தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியும், சதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : லாகூர் கலந்தர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் 
  • நேரம் : இரவு 9.30 மணி
  • இடம்: ஷேக் சயீத் மைதானம், அபுதாபி

போட்டி முன்னோட்டம்

லாகூர் கலந்தர்ஸ்

சொஹைல் அக்தர் தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணி நடப்பு சீசனில் பங்கேற்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. அதில் ஃபகர் ஜமான், பென் டங்க், முகமது ஹபீஸ் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளதால் நாளைய போட்டியில் நிச்சயம் சரவெடிக்கு பஞ்சமிருக்காது. 

அதேபோல் பந்துவீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோருடன் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் இருப்பது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. 

இஸ்லாமாபாத் யுனைடெட்

இந்தாண்டு சீசனில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் பங்கேற்ற 5 போட்டிகளில் மூன்று வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. 

இந்த அணியில் காலின் முன்ரோ, உஸ்மான் கவாஜா ஆகியோருடன் சதாப் கான், இஃப்திகார் அகமது அகியோரும் பேட்டிங் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சில் ஹசன் அலி, முகமது வாசிம் ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிரணியின் ரன் கணக்கை குறைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லாகூர் கலந்தர்ஸ் அணி 8 முறையும், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உத்தேச அணி விவரம்

லாகூர் கலந்தர்ஸ்: ஃபக்கர் ஜமான், ஜீஷன் அஷ்ரப், முகமது ஹபீஸ், சோஹைல் அக்தர் (கே), பென் டங்க், ஜேம்ஸ் பால்க்னர், ரஷீத் கான், சீக்குகே பிரசன்னா, ஷாஹீன் அஃப்ரிடி, அகமது தானியல், ஹரிஸ் ரவூப்

இஸ்லாமாபாத் யுனைடெட்: உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, சதாப் கான் (கே), இஃப்திகார் அகமது, ரோஹைல் நசீர், ஆசிப் அலி, உசேன் தலாத், பஹீம் அஷ்ரப், ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், முகமது மூசா.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - பென் டங்க்
  • பேட்ஸ்மேன்கள் - ஆசிப் அலி, காலின் முன்ரோ, சோஹைல் அக்தர், ஃபக்கர் ஜமான்.
  • ஆல்ரவுண்டர்கள் - பஹீம் அஷ்ரப், சதாப் கான்
  • பந்து வீச்சாளர்கள் - ஹசன் அலி, ரஷீத் கான், ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவூப்
     
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை