Advertisement
Advertisement

Lahore qalandars

காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் ஹாரிஸ் ராவுஃப்!
Image Source: Google

காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் ஹாரிஸ் ராவுஃப்!

By Bharathi Kannan February 26, 2024 • 15:09 PM View: 84

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பாகிஸ்தானின் அதிவேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான லீக்க் போட்டியின் போது லாகூர் கலந்தர்ஸ் அணி தரப்பில் பந்துவீசிய ஹாரிஸ் ராவுஃப் தோள்பட்டையில் காயமடைந்தார். 

இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதும், இதன் காரணமாக அவர் குணமடைய 4 முதல் 6 வாரங்கள் ஆகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து லாகூர் கலந்தர்ஸ் அணி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “மருத்துவக் குழு, ஆலோசனைக்குப் பிறகு, அவர் குணமடைய நான்கு முதல் ஆறு வாரங்கள் தேவை என்று முடிவு செய்தது, இதனால் அவர் நடப்பு பிஎஸ்எல் தொடரை தவறவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

Related Cricket News on Lahore qalandars