டிசம்பர் 5 முதல் லங்கா பிரீமியர் லீக்!

Updated: Wed, Oct 13 2021 19:33 IST
Lanka Premier League 2021 to Start From December 5 (Image Source: Google)

ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் வாரியமும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரை கடந்தாண்டு அறிமுகம் செய்தது. 

அறிமுக சீசன் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் திசாரா பெரேரா தலைமையிலான ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இத்தொடருக்கான இரண்டாவது சீசன் தேதி மற்றும் மைதானங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் கலே கிளாடியேட்டர்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் கொழும்புவிலுள்ள பிரதம்சா மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மேலும் இத்தொடரின் இறுதிச்சுற்றுப் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்டோட்டாவில் நடைபெறும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை