BAN v IRE: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது வங்கதேசம்!

Updated: Sun, May 14 2023 23:32 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றவாது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் ரோனி தலுக்தர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் தமிம் இக்பால் - நஜ்முல் ஹொசைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 35 ரன்களில் நஹ்முல் ஹொசைன் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த தமிம் இக்பாலும் 69 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் முஷ்பிக்கூர் ரஹிம் - மெஹிதி ஹசன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முஷ்பிக்கூர் 45 ரன்களிலும், மெஹித் ஹசன் 37 ரன்களிலும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அயர்லாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மார்க் அதிர் 4 விக்கெட்டுகளையும், ஆண்டி மெக்பிரைன், ஜார்ஜ் டக்ரெல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - ஸ்டீபன் தொஹானி தொடக்கம் கொடுத்தனர். இதில் தொஹானி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டிர்லிங் - பால்பிர்னி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 53 ரன்களில் பால்பிர்னி விக்கெட்டை இழக்க, 60 ரன்களில் பால் ஸ்டிர்லிங்கும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹாரி டெக்டர் - லோர்கன் டக்கர் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் டெக்டர் 40 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த லோர்கன் டக்கரும் 50 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த கர்டிஸ் காம்பேர், ஜார்ஜ் டக்ரெல் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.  

இறுதியில் அதிரடி காட்டிய மார்க் அதிர் 20 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஆண்டி மெக்பிரைனும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்களாலும் இலக்கை எட்ட முடியவில்லை. அதிலும் அயர்லாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்துவீசிய ஹசன் மஹ்முத் 5 ரன்களை மட்டுமே கொடுத்ததுடன் 2 விக்கெட்டுகளயும் கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

இதன்மூலம் வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முஷ்தபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும். ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை