இஸ்மைல், லிசெல் லீ அபாரம்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Updated: Tue, Sep 14 2021 14:20 IST
Lee, Wolvaardt fifties help South Africa secure series win (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீரமானித்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டொட்டின் அதிரடியாக்க விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் அவரைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. 

இதனால் 48.4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக டொட்டின் 71 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இஸ்மைல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கௌ லீசெல் லீ வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய லாரா வால்வொர்டும் தனது பங்கிற்கு அரைசதம் அடித்து அசத்தினார். 

இதனால் 36.4 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லீசெல் லீ 78 ரன்களைச் சேர்த்திருந்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் அப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை