வித்தியாசமான ஷாட்டில் சிக்ஸர் அடித்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Feb 05 2025 11:44 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய எம்ஐ கேப்டவுன் அணியானது ரியான் ரிக்கெல்டர், டெவால்ட் பிரீவிஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் மற்றும் டெவால் பிரீவிஸ் தலா 44 ரன்களையும், ரஸ்ஸி வேன்டர் டுசென் 
40 ரன்களையும் சேர்த்தனர். பார்ல் ராயல்ஸ் தரப்பில் துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணியில் கேப்டன் டேவிட் மில்லர் 45 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 41 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் அடித்த சிக்ஸர் ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி இன்னிங்ஸின் முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசிய நிலையில் அதனை எதிர்கொண்ட பிரிட்டோரியஸ் முதலிரண்டு பந்துகளையும் அடுத்தடுத்து பவுண்டரிகளுக்கு விளாசி தனது இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கினார்.

Also Read: Funding To Save Test Cricket

அப்போது இன்னிங்ஸின் மூன்றாவது பந்த போல்ட் பேட் லைனில் ஒரு லெந்தை பந்தை வீசிய நிலையில், அதனை எதிர்கொண்ட பிரிட்டோரியஸ் யாரும் எதிர்பாராத வகையில் பிலீப் ஷாட்டின் மூலம் சிக்ஸரை விளாசினார். இதனை கண்ட அனைவரும் ஒருகணம் எவ்வாறு அவர் அந்த பந்தை சிக்ஸருக்கு அடித்தார் என ஆச்சரியத்தில் உறைந்தனர். இந்நிலையில் பிரிட்டோரியஸ் விளாசிய இந்த சிக்ஸர் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை