வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் - லிட்டன் தாஸ்!

Updated: Sun, Aug 11 2024 12:17 IST
Image Source: Google

வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறைகள் காரணமாக அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இக்கலவரத்தின் போது அந்நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்கள் தீக்கிரையாகின. அதிலும் குறிப்பாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடும் எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் தற்போது லிட்டன் இந்த விஷயத்தில் மவுனம் கலைத்துள்ளார். மேலும் போராட்டத்தில் தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான வதந்தி தவறானது என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "என் நாட்டு மக்களே, நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சமீப நாள்களாக எனது வீடு எரிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றன, ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்த வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம். நானும் எனது குடும்பத்தினரும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளோம். வங்கதேசம் ஒரு வகுப்புவாத நாடு என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.

அதனால் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.  முழு நாட்டுடனும் எனது தினாஜ்பூர் மக்களுடனும், மற்றவர்களைக் காப்பாற்ற நீங்கள் எழுந்து நின்ற விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது, நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த நாட்டிலிருந்து எல்லாவிதமான வன்முறைகளையும் விலக்கி ஒன்றாக வாழுவோம் என நான் நம்புகிறேன். ஏனென்றால் இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்நிலையில், வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியும் இன்னும் சில தினங்களில் பாகிஸ்தான் செல்லவுள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் கலவரத்திற்கு மத்தியில் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், தங்கள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானில் விளையாடுவதால் ஓரளவு மகிழ்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை