லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா மஹாராஜாஸ் - ஆசியா லையன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
Advertisement
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி உபுல் தரங்கா, ஆஸ்கர் ஆஃப்கான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 193 ரன்களைச் சேர்த்தது.
Advertisement
இதில் அதிகபட்சமாக உபுல் தரங்கா 72 ரன்களையும், ஆஸ்கர் ஆஃப்கான் 69 ரன்களையும் சேர்தனர். இந்திய அணி தரப்பில் பண்டாரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய மஹாராஜஸ் அணி ஆரம்பம் முதலே எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறின.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆசிய லையன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மஹாராஜாஸை வீழ்த்தியது.