எல் எல் சி 2022: யூசுப் பதான் அதிரடியில் இந்தியா மஹாராஜாஸ் அபார வெற்றி!

Updated: Fri, Jan 21 2022 11:28 IST
Image Source: Google

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் - ஆசிய லையன்ஸ் அணிகள் மோதின. 

இப்போட்டியில் முதலில் விளையாடிய ஆசிய லையன்ஸ் அணி உபுல் தரங்கா, கேப்டன் மிஷ்பா உல் ஹக் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக உபுல் தரங்கா 66 ரன்களையும், மிஷ்பா உல் ஹக் 44 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் மன்ப்ரீட் கோனி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 176 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டூவர்ட் பின்னி 10, நமன் ஓஜா 20, சுப்ரமணியம் பத்ரிநாத் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது கைஃப் - யூசுப் பதான் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதில் யூசுப் பதான் அரைசதம் கடந்து அசத்தினார். 

இதன்மூலம் 19.1 ஓவர்களில் இந்தியா மஹாராஜாஸ் அணி இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆசிய லையன்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் அதிகபட்சமாக யூசுப் பதான் 40 பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரிகளை விளாசி 80 ரன்களைச் சேர்த்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை