எல் எல் சி 2022: பீட்டர்சன் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் வெற்றி!

Updated: Thu, Jan 27 2022 11:23 IST
LLC 2022: World Gaints beat Asia Lions by 7 wickets (Image Source: Google)

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் -உலக ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆஸ்கர் ஆஃப்கான் 41 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஜெயண்ட்ஸ் அணிக்கு கெவின் பீட்டர்சன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அவருடன் இணைந்து கெவின் ஓ பிரையனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் பீட்டர்சன் அரைசதம் கடந்தார்.

இதன்மூலம் 13 ஓவர்களிலேயே உலக ஜெயண்ட்ஸ் அணி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆசிய லையன்ஸ் அணியை வீழ்த்தியது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 86 ரன்களைச் சேர்த்த கெவின் பீட்டர்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை