ஆல் டைம் சிறந்த 5 டெஸ்ட் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்த ஃபேர்குசன்!
Lockie Ferguson Picks All-Time Top 5 Test Bowlers: நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆல் டைம் சிறந்த 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளார்.
நியூசிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியின் நேர்காணலின் போது தனது எல்லா காலத்திலும் சிறந்த 5 டெஸ்ட் பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர் எந்த இந்திய பந்து வீச்சாளர்களின் பெயரையும் பட்டியலில் சேர்க்கவில்லை, மேலும் பல ஜாம்பவான்களையும் பட்டியலில் சேர்க்கவில்லை.
அவரது பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் போன்ற நவீன கால நட்சத்திரங்களும் சேர்க்கப்படவில்லை. இது மட்டுமல்லாமல், கிளென் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன், டேல் ஸ்டெய்ன், முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே உள்ளிட்ட ஜம்பவாகள் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. மாறாக பெர்குசன் தனது முதல் 5 இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே சேர்த்தார்.
அவர், முதலில் முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்டைத் தேர்ந்தெடுத்தார், அவரது வாழ்க்கை காயங்களால் பாதிக்கப்பட்டது, ஆனால் அவர் வெறும் 18 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவிலிருந்து, மிட்செல் ஜான்சனும் ஃபெர்குசனின் பட்டலில் இடம்பிடித்தார். ஜான்சன் தனது சகாப்தத்தில் மிகவும் ஆபத்தான இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், மேலும் அவர் 313 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Also Read: LIVE Cricket Score
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோரை ஃபெர்குசன் தேர்வு செய்துள்ளார். இதில் சோயப் அக்தர் 46 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், வசீம் அக்ரம் 414 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். அதன்பின் அவர் வெஸ்ட் இண்டீஸின் சர் கர்ட்லி அம்ப்ரோஸை தனது பட்டியலில் வைத்துள்ளார். ஆம்ப்ரோஸ் டெஸ்ட் கிர்க்கெட்டில் 405 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கெட்ட கனவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.