ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள சவாஸ் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 27 ரன்களையும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப், விஜயகுமார், ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 73 ரன்களையும், பிரியன்ஷ் ஆர்யா 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்ததன் மூலம் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியான்ஸ் அணியை வீழ்த்தியதுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த விக்கெட்டில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்ததாக நினைக்கிறோம். நாங்கள் மிகவும் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம், ஆனால் இது எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட முடியாத நாட்களில் ஒன்றாகும், அது எங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது. ஐபிஎல் அப்படித்தான், இந்த உரிமையாளர் ஐந்து கோப்பைகளை வென்றுள்ளார், அது எப்போதும் கடினமாக இருந்துள்ளது.

நீங்கள் உங்களின் ரன் வேகத்தை குறைக்கும் போது அது எதிரணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்குகிறது. இன்றைய போட்டியில் நாங்கள் அந்த தவறை செய்துள்ளோம். அதனால் இதிலிருந்து கற்றுக்கொண்டு நாக் அவுட்டுகளுக்காக எதிர்நோக்குகிறோம். ஏனெனில் நாங்கள் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எங்களின் ரன் வேகத்தை உயர்த்திருக்க வேண்டும். அதனால் இதுகுறித்து நாங்கள் ஆலோசிக்க வேண்டியது அவசியம். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

அதனால் எலிமினேட்டர் சுற்றில் ஒட்டுமொத்த அணியாக நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். சீசன் முழுவதும் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதற்கேற்றவகையில் பேட்டர்களும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அதனால் நான் அதிகம் பீதி அடையவில்லை. என்ன ஆபத்தில் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். எலிமினேட்டருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News