இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 32ஆவது லீக் போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

Advertisement

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக தொடக்க வீரர் குயின்டன் டி காக் 114 ரன்களையும், மூன்றாவது வீரராக களமிறங்கிய வாண்டர் டுசன் 133 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Advertisement

பின்னர் 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா சார்பாக சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, “இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதாக மகிழ்கிறேன். இந்த போட்டியில் டி காக் மற்றும் ரஸ்ஸி வேண்டர் டுசன் ஆகியோர் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து எங்களுக்கு நல்ல ரன் குவிப்பிற்கு பெரிய அடித்தளத்தை அமைத்தனர். அதேபோன்று பந்து வீச்சிலும் எங்களது அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். 

இந்த போட்டியின் ஆரம்பத்தில் டி காக் மைதானத்தின் தன்மையை சரியாக கணித்து அற்புதமாக விளையாடினார். சரியான பந்துகளுக்கு மரியாதை கொடுத்தும் தவறான பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டி அசத்தினார். இந்த போட்டியின் ஆரம்பத்தில் தனது இயல்பான அவர் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் நேரம் செல்ல செல்ல அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதோடு 30 ஓவர்களை கடந்த பின்னர் எங்களது அணியின் ஹிட்டர்கள் எப்பொழுதுமே பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் செல்வார்கள் என்பதால் அதன்படியே இந்த போட்டியிலும் பெரிய ரன் குவிப்பை நோக்கி அழைத்துச் சென்றனர். தற்போதைக்கு எங்களது அரையறுதிக்கான வாய்ப்பு உறுதியாக உள்ளதா? என்பதை எங்களது அணியின் மேனேஜரை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என விரும்புகிறோம். எனவே தற்போது இந்த வெற்றியை கொண்டாட முடியாது ஆனால் நாங்கள் தற்போதே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ததாகவே நம்புகிறோம். எனவே நாளை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அதன்பிறகு அடுத்த போட்டிக்காக தயாராக உள்ளோம்” என கூறியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News