இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பி லௌவ் கண்டி - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய கண்டி அணிக்கு முகமது ஹாரிஸ் - ஃபகர் ஸமான் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹாரிஸுடன் இணைந்த தினேஷ் சண்டிமலும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

Advertisement

பின் 41 ரன்களில் சண்டிமல் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த முகமது ஹாரிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வநிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 79 ரன்களைச் சேர்த்திருந்த முகமது ஹாரிஸும் விக்கெட்டை இழந்தார். 

இறுதில் பி லௌவ் கண்டி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைச் சேர்த்துள்ளது. ஜாஃப்னா கிங்ஸ் அணி தரப்பில் நுவான் துஷாரா 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்‌ஷனா, அலெலா கருரணரத்னே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர் சரித் அசலங்கா ஒரு ரன்னிலும், கிறிஸ் லின் 19 ரன்களிலும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 19 ரன்களுக்கும், துனித் வல்லலகே 3 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் இணைந்த சோயிப் மாலிக் - டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவு தாக்குப்பிடித்தனர். பின் சோயிப் மாலிக் 31 ரன்களிலும், டேவிட் மில்லர் 26 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 17.2 ஓவர்களில் ஜாஃப்னா கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement

இதன்மூலம் பி லௌவ் கண்டி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. அதேசமயம் நடப்பு சாம்பியனான ஜாஃப்னா கிங்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News