எல்பிஎல் 2021: ஜெஃப்ரி வாண்டர்சே பந்துவீச்சில் கொழும்பு ஸ்டார்ஸ் அபார வெற்றி!

Updated: Sat, Dec 18 2021 13:12 IST
LPL: Vandersay takes 6 wickets as Colombo Stars defeat Kandy Warriors (Image Source: Google)

லங்கா பிரீமிய லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் - கண்டி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கண்டி அணி முதலில் பந்துவீசியது. 

இதையடுத்து விளையாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி குசால் பெரேரா, தனஞ்செய டி சில்வா, சண்டிமல் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா 58 ரன்களையும், தினேஷ் சண்டிமல் 44 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய கண்டி வரியர்ஸ் அணி ஜெஃப்ரி வாண்டர்சே பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய வாண்டர்சே 25 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனால் 17 ஓவர்களிலேயே கண்டி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் கண்டி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை