17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலும், அடுத்த போட்டிகளில் அபார வெற்றியையைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

இதையடுத்து அந்த அணி அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி, காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது. 

Advertisement

இதுகுறித்து அந்த அணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஷிவம் மாவி துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். திறமையான வலது கை வேகப்பந்து வீச்சாளர் டிசம்பரில் ஏலத்திற்குப் பிறகு எங்களுடன் இணைந்ததுடன், சீசனுக்கு முந்தைய முகாமின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் இந்த சீசனில் அணியின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார்.

ஆனால் அவர் தற்போது காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஷிவம் தூபேவின் இந்த முடிவிற்கு நாங்கள் எங்களது முழு ஆதரவையும் அளிக்கிறோம். மேலும் அவர் தனது காயத்திலிருந்து மீள எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய உறுதிகொண்டுள்ளோம். அவர் விரைவாக திரும்ப வேண்டும். மீண்டும் அவர் முழு உடற்தகுதியுடன் திரும்புவார் என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. 

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஷிவம் மாவியை, இந்த சீசனுக்கு முன்னதான மினி ஏலத்தில் ரூ.6.4 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது. இதுவரை ஐபிஎல் தொடரில் 32 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிவம் மாவி, 30 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளா என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News