Advertisement
Advertisement

Lucknow super gaints

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை முந்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
Image Source: Google

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை முந்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

By Bharathi Kannan April 08, 2024 • 13:58 PM View: 67

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பை ஏற்றிவருகிறது. இத்தொடரில் இதுவரை 21லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றதுடன் நடப்பு சீசனில் தங்களுடைய முதல் வெற்றியை பெற்றது.

இதையடுத்து இரவு நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இந்த இரண்டு போட்டிகளின் முடிவு நடப்பு ஐபிஎல் புள்ளிப்பட்டியலில்  அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  அதன்படி நேற்றுவரை புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது, டெல்லி அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் தற்போது எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Related Cricket News on Lucknow super gaints