ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Apr 01 2023 15:43 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நேற்று கோலகலமாக தொடங்கியது. இன்றைய நாளில் இரு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடுகிறது. இரவு நடக்கும் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட உள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ அணி, முதல் தொடரிலேயே பிளே ஆஃப் வரை முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பேட்டிங், பவுலிங் என்று சமபலம் கொண்ட லக்னோ அணி, அனைத்து அணிகளையும் வீழ்த்தும் வல்லமை கொண்டது. ஏனென்றால் தொடக்க வீரர் முதல் டெத் ஓவர் வீசும் பந்துவீச்சாளர் வரை யார் என்பதில் லக்னோ அணியிடம் தெளிவான திட்டமும் வீரர்களும் உள்ளனர்.

டி காக், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, குர்ணால் பாண்டியா, மார்கஸ் ஸடோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆவேஷ் கான், மார்க் வுட், உனாத்கட், ரவி பிஷ்னாய், ரொமரியோ ஷெஃபர்ட் என்று பலமான அணியாக உள்ளது. இந்த அணியின் இடதுகை பந்துவீச்சாளரான மோசின் கான் மட்டும் காயம் காரணமாக விலகியுள்ளார். ஆனால் அவருக்கு பதிலாக உனாத்கட் இருப்பதால், அந்த பிரச்சனையும் நிரப்பப்பட்டுள்ளது. அதேபோல் நிக்கோலஸ் பூரனை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேபோல் டெல்லி அணியை பொறுத்தவரை கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகி இருந்தாலும், டேவிட் வார்னரின் அனுபவ கேப்டன்சி இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையின் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் ப்ரித்வி ஷா, அக்சர் படேல், மிட்செல் மார்ஷ், ரோவ்மன் பவல், ரைலி ரோசவ் என சரியான கலவையில் வீரர்கள் இருக்கிறார்கள்.

அதேபோல் பந்துவீச்சில் நார்கியே, முஸ்தாஃபிகுர் ரஹ்மான், இங்கிடி, குல்தீப் யாதவ், கலீல் அஹ்மத் மற்றும் சேத்தன் சக்காரியா ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் தேசிய அணிக்கு ஆடி வருவதால் முக்கிய வெளிநாட்டு பந்துவீச்சாளர்களான நார்கியே, ரஹ்மான், இங்கிடி ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வலிமையான லக்னோ அணிக்கு டெல்லி அணியின் அனுபவமில்லாத பந்துவீச்சு சவாலளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 2
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 2
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 0

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கேஎல் ராகுல் (கே), குயின்டன் டி காக், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்னால் பாண்டியா, ஜெய்தேவ் உனட்கட், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், மார்க் வூட்

டெல்லி கேப்பிட்டல்ஸ் - டேவிட் வார்னர் (கே), பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், ரைலி ரூஸோவ், அக்சர் படேல், அமன் கான், சேத்தன் சகாரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது, குல்தீப் யாதவ்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், கேஎல் ராகுல்
  • பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், பிரித்வி ஷா, தீபக் ஹூடா
  • ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்சர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தாபிசுர் ரஹ்மான், அவேஷ் கான், குல்தீப் யாதவ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை