ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Apr 07 2023 10:48 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது. 

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

தனது முதல் ஆட்டத்தில் டெல்லியை பந்தாடிய லக்னோ அணி, 2ஆவது ஆட்டத்தில் சென்னையிடம் 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் உள்ள லக்னோ அணிக்கு தென்ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக் வருகை தந்திருப்பது உற்சாகத்தை அளித்துள்ளது.

அதே நேரத்தில் யாரை கழற்றி விடுவது என்பதில் அணி நிர்வாகத்துக்கு தலைவலியாக அமைந்துள்ளது. அனேகமாக வெளிநாட்டு வீரர்களில் நிகோலஸ் பூரன் அல்லது மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரில் ஒருவரது இடம் காலியாகி விடும். முதல் 2 ஆட்டங்களிலும் அரைசதம் நொறுக்கிய கைல் மேயர்ஸ் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். உள்ளூரில் ஆடுவது லக்னோ அணிக்கு சாதகமான அம்சமாகும்.

அந்த அணியின் பந்துவீச்சில் மார்க் வுட், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், யாஷ் தாக்கூர் என நட்சத்திர வீரர்களும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்பகிறது. 

அதேசமயம் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 72 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் ஐடன் மார்க்ரம் விளையாடவில்லை. இப்போது அவரும் அணியுடன் இணைந்து விட்டார்.

அத்துடன் ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன் ஆகிய தென்ஆப்பிரிக்க வீரர்களும் சர்வதேச போட்டியை முடித்துக் கொண்டு வந்து விட்டனர். இதனால் இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் கூடுதல் நம்பிக்கையுடன் ஆடுவார்கள். 

இதனால் இன்றைய போட்டியில் ஹாரி ப்ரூக், ஆதில் ரஷித் ஆகியோருக்கு பதில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் ஃபசஹல் ஃபரூக்கி, நடராஜன், உம்ரான் மாலிக் ஆகியோரும் இருப்பது அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்பகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 01
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் -01
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -0

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கேஎல் ராகுல் (கே), கைல் மேயர்ஸ்/குயின்டன் டி காக், தீபக் ஹூடா, குர்னால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கவுதம், மார்க் வூட், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அவேஷ் கான்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கே), ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், அடில் ரஷித், நடராஜன், உம்ரான் மாலிக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ் – கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி
  • ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், கைல் மேயர்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - தங்கராசு நடராஜன், மார்க் வூட், ரவி பிஷ்னாய், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - கைல் மேயர்ஸ், ஐடன் மார்க்ரம், மார்க் வூட்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை