ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதில் நாளை மறுநாள் நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement

இந்த சீசனில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

Advertisement

லக்னோ அணியைப் பொறுத்தவரையில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளதால், வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிரமாக உள்ளது. இதனால் சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்த லக்னோ அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பிடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக கடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரை மட்டுமே விசிய அவர், காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் அவரது மருத்துவ நிலை குறித்து அணியின் நிவாக அதிகாரி மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். இதில் ஜஸ்டின் லங்கர், சிஎஸ்கே அணிக்கெதிரான போட்டியில் மயங்க் யாதவ் விளையாடுவார் என உறுதியளித்திருந்தார். 

ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவ் விளையாடிய முதலிரண்டு போட்டிகளில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதோடு, 150+ வேகத்தில் பந்துவீசி பேட்டர்களை நிலைகுலைய செய்திருந்தார். அதன்பின் அவர் விளையாடாத இரண்டு போட்டிகளிலும் லக்னோ அணி தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் அவரை மீண்டும் களமிறக்கும் முயற்சியில் லக்னோ அணி களமிறங்கியுள்ளது.

 

Advertisement

அந்தவகையில் மயங்க் யாதவ் பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் முன்னிலையில் பந்துவீசி பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளியையும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்று வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கெதிரான போட்டியில் நிச்சயம் மயங்க் யாதவ் அணியில் இடம்பிடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News