இந்திய அணியின் பயிற்சியாளராக இவரை நியமிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!

Updated: Sat, Nov 12 2022 23:00 IST
Make Ashish Nehra coach and Hardik Pandya captain in T20Is: Harbhajan Singh (Image Source: Google)

டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதியில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி பந்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, அதன்பிறகு தென் ஆப்பிரிக்காவிடம் மட்டும்தான் தோற்றது.

அணியின் மிடில் வரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால்தான், இப்படி வெற்றிகளை குவிக்க முடிந்தது. அஸ்வின், அக்சர் படேல் ஆகியோர் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வந்தார்கள். அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அவ்வபோது சிறப்பாக பந்துவீசி நெருக்கடிகளை ஏற்படுத்தினர். இருப்பினும், தொடக்க வீரர்களின் செயல்பாடுதான் பிரச்சினையாக இருந்து வந்தது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில், பவர் பிளேவில் இந்தியா சராசரியாக 6 ரன்களை மட்டுமே அடித்தது. இதற்கு காரணம் ஓபனர்கள் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர்தான். ஃபார்ம் அவுட்டில் இருந்த ராகுல், அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் நிதானமாக விளையாட முற்பட்டு ஆட்டமிழந்தார். ரோஹித்தும் இதே மனநிலையில் விளையாடியதாகத்தான் தெரிகிறது. அரையிறுதியிலும் இதையேதான் செய்தார்கள். தோல்விக்கு இதுவும் மிக முக்கிய காரணம்.

அதுமட்டுமல்ல, அடிலெய்டில் அவ்வபோது விரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் எனத் தெரிந்தும், ரோஹித் சர்மா அணியின் ஒரேயொரு விரிஸ்ட் ஸ்பின்னர் சஹலை சேர்க்கவில்லை. மேலும், ஸ்பின்னர்கள் பந்துவீசியபோது ரிஷப் பந்தை களமிறக்காமல் ஹார்திக் பாண்டியாவை ரோஹித் களமிறக்கினார். இப்படி இந்த மூன்று தவறுதான் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியை பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும், இந்திய டி20 அணி இனி எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் பலர் ஆலோசனைகளை, பரிந்துரைகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், டி20 அணிக்கு புது பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“டி20 போட்டிகளுக்கு மூத்த முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிப்பது தவறு. அன்மையில் ஓய்வுபெற்றவர்களைத்தான் நியமிக்க வேண்டும். அவர்கள்தான் புத்துணர்வுடன் இளம் வீரர்களை புரிந்துகொள்ளும் மனப்பான்மையுடன் இருப்பார்கள். அந்த வகையில் ஆஷிஸ் நெக்ரா, இந்திய அணிக்கு பயிற்சியாளராக சரியான வீரராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்

‘‘சமீபத்தில் ஐபிஎல் 15ஆவது சீசனில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு இவர் கோப்பை வென்று கொடுத்திருக்கிறார். அதுவும், பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற முதல் தொடரிலேயே கோப்பை வென்று கொடுத்திருக்கிறார். அவரால் இந்திய டி20 அணிக்கு சிறப்பாக பயிற்சி வழங்க முடியும். ஒருநாள், டெஸ்ட் அணிக்கு மட்டும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கட்டும். டி20 அணிக்கு ஹார்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை