சிறந்த ஒருநாள் வீரர் & வீராங்கனை விருது 2024: பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி நேற்றைய தினம் அறிவித்தது. இதில் சிறந்த டி20 வீரருக்கான பரிந்துரை பட்டியலில் அர்ஷ்தீப் சிங், பாபர் ஆசாம், டிராவிஸ் ஹெட் மற்றும் சிக்கந்தர் ரஸாவும், சிறந்த டி20 வீராங்கனை பட்டியலில் லாரா வோல்வார்ட், அமெலியா கெர், சமாரி அத்தபத்து மற்றும் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் ஆகியோரும் இடம்பிடித்தனர்.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகான பரிந்துரை பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி 2024ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா, குசால் மெண்டிஸ், ஆஃப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா 2024ஆம் ஆண்டில் 24 விக்கெட்டுகளையும், மற்றொரு இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் 17 இன்னிங்ஸில் 53 சராசரில் 742 ரன்களையும் சேர்த்ததன் மூலம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 12 இன்னிங்ஸில் 417 ரன்களையும், 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேற்கொண்டு விண்டீஸின் ரூதர்ஃபோர்ட் 106.5 என்ற சராசரியில் 425 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்த்து ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட், தென் ஆப்பிரிக்காவின் லராவோல்வார்ட், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா மற்றும் இலங்கை அணியின் சமாரி அத்தபத்து ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் 9 இன்னிங்ஸ்களில் 369 ரன்களையும், 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்த பட்டியளில் இடம்பிடித்துள்ள இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2024ஆம் ஆண்டில் 12 இன்னிங்ஸ்களில் விளையாடி 61.91 என்ற சராசரியில் 743 ரன்களையும், ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளது. மேற்கொண்டு இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து 9 இன்னிங்ஸ்களில் 458 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லார வோல்வார்ட் 12 இன்னிங்ஸில் 87.12 என்ற சராசரியில் 697 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.