மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பாரா மார்கஸ் ஹாரிஸ்?

Updated: Mon, May 12 2025 13:49 IST
Image Source: Google

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சீசனுக்கான இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்த இலங்கை தொடரின் போதே பல ஆஸ்திரேலிய வீரர்கள் தொடரில் இருந்து விலகியும், காயம் காரணமாகவும் பங்கேற்கமலும் இருந்தனர். மேலும் உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட்டும், அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஷும் வாய்ப்பு பெற்றிருந்தனர். இதனால் இந்த சாம் கொன்ஸ்டாஸ் போன்ற இளம் வீரர்கள் இடம்பிடிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏனெனில் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் எதிர்கால தொடக்க வீரராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. ஆனால் இலங்கை தொடரில் சாம் கொன்ஸ்டாஸுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக காளமிறங்கியதுடன், கொன்ஸ்டாஸ் மீண்டும் நாடு திரும்பினார். 

இதனால் உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் இறுதிப்போட்டியில் யார் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி தேர்வாளர்களுக்கு மேலும் தலைவலியைக் கொடுக்கும் வகையில் அந்த அணியின் தொடக்க வீரருக்கான தேர்வில் மார்கஸ் ஹாரிஸும் இணைந்துள்ளார். சமீபத்தில் அவர் இங்கிலாந்து கவுண்டி தொடரில் சதமடித்து அசத்தியதன் மூலம் அவரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தயாராக இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான மார்கஸ் ஹாரிஸ் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களை அடித்துள்ளார். ஆனால் அதன்பின் கடந்த 2022ஆம் ஆண்டு மோசமான ஃபார்ம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் தற்போது வரை மீண்டும் அணிக்கு திரும்ப முடியாமல் உள்ளார். இதனால் இம்முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை