டி20 பிளாஸ்ட்: கரோனா ஆச்சுறுத்தல் காரணமாக போட்டியிலிருந்து விலகிய லபுசாக்னே!
இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான டி20 பிளாஸ்ட் நடைப்பெற்றுவருகிறது. மொத்தம் 18 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இரு குழுக்காளாக பிரிந்து விளையாடி வருகின்றன.
உலகின் பல முண்ணனி வீரர்களும் இத்தொடரில் விளையாடி வருவதால், இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் கிளாமோர்கன் அணிக்காக ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் என்று கூறப்பட்டு வரும் மார்னஸ் லபுசாக்னே விளையாடி வருகிறார். இந்நிலையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக லபுசாக்னே, மிடில் செக்ஸ் அணியுடனான போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மேத்யூ மைனர்ட் கூறுகையில், “மிடில்செக்ஸ் அணியைச் சேர்ந்த சிலருக்கு கரோனா தொற்று உறுதியானதாக இன்று தகவல் வந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்னஸ் லபுசாக்னே எங்களுடன் பயணிப்பதைத் தவிர்த்து, போட்டியிலிருந்து விலகினார்” என்று தெரிவித்துள்ளார்.
டி20 பிளாஸ்ட் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள மார்னஸ் லபுசாக்னே 3 அரைசதங்கள் உள்பட 294 ரன்கள குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.