விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. .

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்கள் விளாசினார். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசரஸ் ஹைதரபாத் அணி, 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

Advertisement

இப்போட்டியில் அபாரமாக விளையாடி 98 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரான தனது யார்க்கரின் மூலம் ஐடன் மார்க்ரமை க்ளீன் போல்ட்டாக்கிய  காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

அதன்படி நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஐடன் மார்க்ரம் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். நேற்றைய போட்டியில் 32 ரன்களைச் சேர்த்திருந்த மார்க்ரம், இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை வீசிய மதீஷா பதிரனாவின் யார்க்கரை கணிக்க தவறி பந்தை தவறவிட்டார். இதனால் க்ளீன் போல்டான மார்க்ரம் ஒரு நிமிடம் என்ன நடந்தது என்பது தெரியாமல் சோகத்துடன் பெவிலியன் திரும்பினார். இக்காணொளியானது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News