சர்வதேச அனுபவமில்லாதவரை பயிற்சியாளராக நியமித்தது இங்கிலாந்து!

Updated: Wed, May 18 2022 16:02 IST
Image Source: Google

இங்கிலாந்து கிரிக்கெட் அணி புதிய காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் விலகியதையடுத்து புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு தனித்தனி கேப்டனை நியமித்ததுபோல், இப்போது பயிற்சியாளர்களையும் தனித்தனியாக நியமித்துள்ளது. டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார்.
 
இப்போது ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் நியமிக்கப்பட்டுள்ளார். மேத்யூ மோட் முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மட்டுமே ஆடியிருக்கிறாரே தவிர, சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியதில்லை. ஆனால் பயிற்சியாளராக நீண்ட நெடிய அனுபவம் மிக்கவர்.
 
2015ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்துவந்த மேத்யூ மோட், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதால், அந்த பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை