Matthew mott
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு மெக்கல்லம் சிறந்த தேர்வாக இருப்பார் - ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் அந்த அணியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி குமார் சங்கக்காரா, ஈயன் மோர்கன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லமை நியமிக்கலாம் என்று ஈயன் மோர்கன் ஆலோசனை கூறியுள்ளார்.
Related Cricket News on Matthew mott
-
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு ஆண்டி ஃபிளவர் சரியாக இருப்பார் - மைக்கேல் அதர்டன்
இங்கிலாந்து அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான சரியான தேர்வாக ஜிம்பாப்வேவைச் சேர்ந்த ஆண்டி ஃபிளவர் இருப்பார் என்று நம்புகிறேன் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் தலமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் மேத்யூ மோட்!
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தோல்வியின் காரணமாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார். ...
-
இந்த தோல்வி எங்களை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது - மேத்யூ மோட்!
உணர்ந்து கொள்ள முடியாதபடி தவறான நேரத்தில் வீரர்களில் சிலர் ஃபார்ம் இல்லாமல் இருப்பது பெரிய பிரச்சனைகளை உண்டு செய்திருக்கிறது என இங்கிலாந்து பயிற்சியாளர் மேத்யூ மோட் தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் ஓய்வு முடிவை பென் ஸ்டோக்ஸ் திரும்ப பெற வேண்டும் - இங்கிலாந்து பயிற்சியாளர்!
2023இல் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறுவதால் அந்த முடிவை வாபஸ் பெற்று மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென இங்கிலாந்தின் பயிற்சியாளர் மேத்யூ மாட் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
சர்வதேச அனுபவமில்லாதவரை பயிற்சியாளராக நியமித்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47