பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தண்டர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஸ்டோய்னிஸ், கிளார்க் ஆகியோர் தலா 13 ரன்களோடு ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 16 ரன்களில் நடையைக் கட்டினார். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த நிக் லர்கின் - கேட்ரைட் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் லர்கின் அரைசதம் அடித்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக லர்கின் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதையடுத்து இலக்கைத் துரத்திய தண்டர் அணியில் கில்க்ஸ் - சாம் பில்லிங்ஸ் இணை அதிரடியாக விளையாடி இலக்கை எட்ட முயற்சித்தனர். ஆனால் கில்க்ஸ் 56 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து வந்த வீரர்களும் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் தண்டர் அணி 161 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News