இப்போது பெஞ்சில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் கூட 145 கிமீ-க்கு மேல் வீசுகிறார்கள் - முகமது ஷமி!

Updated: Mon, Oct 21 2024 21:58 IST
Image Source: Google

இந்திய அணி தற்சமயம் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.  இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருவதுடன், இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும், எந்தெந்தெ வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதன்படி காயத்தில் இருந்து மீண்டும் வரும் முகமது ஷமிக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

முன்னதாக, கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார். அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடர் மற்றும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது காயத்தில் இருந்து மீளும் முயற்சியில் முகமது ஷமி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு முகமது ஷமி தீவிர பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், முகமது ஷமி பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி விளையாடுவார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது குறித்தும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்பது குறித்தும் முகமது ஷமி தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய முகமது ஷமி, “காயத்திற்குப் பிறகு மீண்டும் பாதைக்கு வருவது மிகவும் கடினம், எனவே பொறுமை என்பது மிகப்பெரிய விஷயம். காயங்கள் உங்களுக்கு பொறுமையை கற்றுக்கொடுக்கிறது மற்றும் உங்கள் திறமையை புதுபிக்க உதவும். தற்போதுள்ள இந்திய கிரிக்கெட்டுக்கு நடந்த சிறந்த விஷயம் என்னவென்றால், நமது வேகப்பந்து வீச்சு பலம் உண்மையில் உயர்ந்துள்ளது. முன்பு, ஒரு சில பந்து வீச்சாளர்கள் மட்டுமே மணிக்கு 140-145 கிமீ வேகத்தில் வீசினர். ஆனால் இப்போது பெஞ்சில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் கூட 145 க்கு மேல் வீசுகிறார்கள்.

Also Read: Funding To Save Test Cricket

வேகப்பந்துவீச்சில் என்னை மிகவும் கவர்ந்த பெயர்களில் ஒன்று மயங்க் யாதவ். அவர் உண்மையிலேயே கவனம் ஈர்க்கக்கூடியவராக உள்ளார். அவர் எதிர்காலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சின் தடியடியை சுமக்கும் ஒருவர். மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய மூன்று பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் இருந்ததில்லை. இப்போது எங்களிடம் 145 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய சிலர் இருக்கிறோம். இந்தத் தலைமுறைக்கு எப்படி எதிர்த்துப் போராடுவது என்பது தெரியும், அதை நாங்கள் வெளிநாடுகளில் காட்டியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை