இந்திய தொடர் இங்கிலாந்து அணிக்கு ஒரு பயிற்சியாக அமையும் - பிரண்டன் மெக்கல்லம்

Updated: Tue, Jan 21 2025 10:06 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இத்தொடரானது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு ஒரு பயிற்சியாக அமையும் என இங்கிலாந்து அணி தலைமை பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "நாங்கள் உண்மையிலேயே பார்க்கக்கூடிய ஒரு கிரிக்கெட் பிராண்டை விளையாட வேண்டும் என்று நான் மிகவும் ஆவலாக உள்ளேன். எங்களிடம் உள்ள திறமையைக் கொண்டு, எங்களால் அதனை செய்ய முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஏனெனில் எங்களிடம் அதிரடியான பேட்டர்கள், சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்கள், சிறந்த ஃபீல்டர்கள் மற்றும் அதிவேக பந்துவீச்சாளர்கள் உள்ளனர். 

அடுத்த சில வாரங்களில் நாங்கள் ஆரம்பத்திலேயே செயல்பட முயற்சிப்போம், சில சமயங்களில் நாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போகும் சூழ்நிலை ஏற்படும் என்று நான் நம்புகிறேன். ஆனால், அடுத்த சில வாரங்களில் நாங்கள் அதைச் சிறப்பாகச் செய்வோம் என்று நம்புகிறோம், மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னர் நாங்கள் நல்ல நிலையில் இருப்போம் என்று நம்புகிறேன். 

மேலும், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறார், நமக்குக் கிடைத்த அணியைப் பற்றி அவர் உற்சாகமாக இருக்கிறார், மேலும் நமக்கு முன்னால் இருக்கும் வாய்ப்பைப் பற்றி உற்சாகமாக இருக்கிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடுவதை நாம் நிச்சயமாகப் பார்ப்போம், மேலும் அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் விளையாட்டை உண்மையிலேயே வலுவான மகிழ்ச்சியுடன் முடிப்பார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து டி20 அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ரெஹான் அகமது, ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட், சாகிப் மஹ்மூத்.

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டி20 அணி: அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை