ஐசிசி மாதாந்திர விருதுகள்: முகமது வசீம், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹீலி மேத்யூஸ் ஆகியோர் பரிந்துரை!

Updated: Tue, Jun 03 2025 16:16 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. 

இதில் ஆடவருக்கான பரிந்துரை பட்டியலில் ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்காட்லாந்தின் பிராண்டன் மெக்முல்லன், அமெரிக்க அணியின் மிலிந்த் குமார் மற்றும் வங்கதேச டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐக்கிய அரபு அமீரக அணி கேப்டன் முகமது வசீம் அகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இதில் பிராண்டன் மெக்முல்லன் கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் 258 ரன்களைச் சேர்த்துள்ளார். 

மேலும் இதில் அவர் இரண்டு அரைசதங்களையும், ஒரு சதத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு பந்துவீச்சிலும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதுதவிர்த்து இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள மிலிந்த் குமார் கடைசியாக விளையாடிய நான்கு ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் 67 என்ற சராசரியுடன் 201 ரன்களையும், பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கும் முகமது வசீம் பேட்டிங்கில் இரண்டு அரைசதங்களுடன் 145 ரன்களைச் சேர்த்ததுடன், தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளது. இதுதவிர்த்து கடந்த மாதம் முகமது வசீம் விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 169 ரன்களையும் எடுத்துள்ளார். இதன் காரணமாக அவரது பெயரும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 

Also Read: LIVE Cricket Score

அதேபோல் மே மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் அபார அட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் சோலே ட்ரையான் ஆகியோரும், மகளிர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை