ஐசிசி தரவரிசை: மெஹதி ஹசன் சாதனை!

Updated: Thu, May 27 2021 11:25 IST
Image Source: Google

இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

மேலும் இலங்கை அணிக்கு எதிராக வங்கதேச அணி வெல்லும் முதல் ஒருநாள் தொடராகவும் இது அமைந்தது. இந்நிலையில் ஐசிசி இன்று சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

ஐசிசியின் ஒருநாள் தரவரிசை பட்டியலில் வங்கதேச பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இலங்கை அணியுடனான தொடரின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் இவருக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.

இதன்மூலம் ஐசிசி ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 3ஆவது வங்காளதேச வீரர் என்ற பெருமையை மெஹதி ஹசன் பெற்றுள்ளார்.

முன்னதாக 2009ஆம் ஆண்டு அந்த அணியின் ஷாகிப் அல் ஹசன் முதல் இடத்தையும், 2010ஆம் ஆண்டு அப்துர் ரசாக் 2வது இடத்தையும் பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் வங்கதேச அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் முஷ்பிக்கூர் ரஹிம் ஒருநாள் பேட்டிங் தரவரிசை பட்டியலில் 14ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் இத்தொடரின் முதல் போட்டியில் 84 ரன்களும், 2வது போட்டியில் 125 ரன்களையும் சேர்த்ததன் மூலம் அவருக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை