வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Fri, Oct 31 2025 21:40 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பந்துவீச அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தன்ஸித் ஹசன் - பர்வேஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் பர்வேஸ் ஹொசைன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சைஃப் ஹொசைன் 23 ரன்னிலும், ரிஷாத் ஹொசைன் 3 ரன்னிலும், நுருல் ஹசன் ஒரு ரன்னிலும், நசும் அஹ்மத் ஒரு ரன்னிலும், ஜக்கர் அலி 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த தன்ஸித் ஹசன் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தன்ஸித் ஹசன் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 89 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் வங்கதேச அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே  சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர், காரி பியர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் அலிக் அதனாஸ் ஒரு ரன்னிலும், அடுத்து வந்த பிராண்டன் கிங் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த அமிர் ஜங்கூ - ரோஸ்டன் சேஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையடிய் ரோஸ்டன் சேஸ் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அதேசமயம் அமிர் ஜங்கூர் 34 ரன்னில் ஆட்டமிழ்க்க, ரோஸ்டன் சேஸும் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Also Read: LIVE Cricket Score

அடுத்து களமிறங்கிய அகீம் அகஸ்டேவும் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 50 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்த ரோஸ்டன் சேஸ் ஆட்டநாயகன் விருதையும், ரொமாரியோ ஷெஃபர்ட் ஆட்டநாயகன் விருதையும் வென்றனர். 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::