வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச ஒருநாள் அணி அறிவிப்பு!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில் காயம் காரணமாக கேப்டன் நஹ்முல் ஹொசைன் சாண்டோவுக்கு இடம்பிடிக்கவில்லை.
மேற்கொண்டு அணியின் நட்சத்திர வீரர் தாவ்ஹித் ஹிரிடோயும் காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வங்கதேச அணியை கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் வழிநடத்தி வருகிறார்.
மேற்கொண்டு குழந்தை பிறப்பின் காரணமாக அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இத்தொடரில் விளையாடவில்லை. அதேசமயம் கடந்த ஓராண்டாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அஃபிஃப் ஹொசைன் மீண்டும் வங்கதேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர லிட்டன் தாஸ், பர்வேஸ் ஹொசைன், ஹசன் மஹ்முத், தன்ஸித் ஹசன், தஸ்கின் அஹ்மத் உள்ளிட்டோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேச ஒருநாள் அணி: மெஹ்தி ஹசன் மிராஸ் (கேப்டன்), லிட்டன் தாஸ், தஞ்சீத் ஹசன் தமீம், சௌமியா சர்க்கார், பர்வேஸ் ஹுசைன் எமன், முகமது மஹ்முதுல்லா, ஜெகர் அலி அனிக், அஃபிஃப் ஹுசைன், ரிஷாத் ஹுசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சீம் ஹசன் ஷாகிப், நஹீத் ராணா.